படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகைக்கு நெஞ்சுவலி..! மருத்துவமனையில் அனுமதி..!

3 years ago 292

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் முன்னணி வேடத்தில் நடித்துள்ள, நடிகை ஆமனி.

இவருக்கு படப்பிடிப்பில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் படக்குழுவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தமிழில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான, 'புதிய காற்று' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஆமனி. 


இதை தொடர்ந்து, 'ஒன்னும் தெரியாத பாப்பா', 'தங்கமான தங்கச்சி', 'இதுதாண்டா சட்டம்', 'முதல் சீதனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.


தமிழை தவிர, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஆமனி.

மேலும், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பூவே உனக்காக' மற்றும் 'ரோஜா' ஆகிய சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர், தெலுங்கில் சிறு பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் நடந்து வந்த நிலையில்... திடீர் என இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து படக்குழுவினர் இவரை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்... சாதாரண நெஞ்சுவலிதான் என கூறியபின்னரே படக்குழுவினர் நிம்மதி அடைந்தனர்.

உரிய சிகிச்சைக்கு பின் நடிகை ஆமனி விரைவில் டிஸ்சர்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. அதே போல் தற்போது இவர் நடித்து வரும் படமும் ஒருவாரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...