படப்பிடிப்பில் ரத்தக்களரியில் சூரி... ஒரு படத்துக்காக இவ்வளவு கஷ்டப்படுறதா?

1 year ago 110

வெற்றிமாறன் இயக்கிய "விடுதலை" திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதை பலரும் அறிவார்கள். இத்திரைப்படம் கடந்த 2 ஆண்டுகளாக படமக்கப்பட்டு வந்தது. 

பலரும் இத்திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர். ஒரு வழியாக இத்திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் சூரி, "விடுதலை" படப்பிடிப்பின்போது தான் பட்ட கஷ்டங்களை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

"விடுதலை" படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது அந்த காட்சியில் மிகவும் கடுமையான ஸ்டண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததாம். 

 அதற்காக ஸ்டண்ட் மாஸ்டரிடம் ஒத்திகை பார்த்திருக்கிறார் சூரி. அப்போதே பல்டி அடித்ததில் சூரிக்கு தோள்பட்டை ஜவ்வு கிழிந்துவிட்டதாம். அதனை தொடர்ந்து நான்காவது நாளில் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டாராம்.

அந்த மிக நீண்ட ஸ்டண்ட் காட்சி 15 நாட்கள் படமாக்கப்பட்டதாம். அந்த 15 நாட்களில் பலமாக அடிபட்டு கையில் 4 தையல்கள், காலில் 6 தையல்கள் போடப்பட்டதாம். 

அதே போல் வலது பக்க தோள்பட்டை இறங்கிவிட்டதாம். அடிக்கடி காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல நேரிட்டதாம். இதனை பார்த்த டாக்டர் மிகவும் நொந்துப்போய்விட்டாராம்.

"என்னங்க ஷூட்டிங்ன்னா இப்படியா இருக்கும்" என டாக்டர் கேட்க, அதற்கு சூரி, "ஆமாங்க. ஷூட்டிங்க்ன்னா இப்படித்தான் இருக்கும்" என கூறியிருக்கிறார். 

ஒரு தருணத்தில் வெற்றிமாறன் சூரியிடம் இந்த ஸ்டண்ட் காட்சி படமாக்குவதை இப்போதைக்கு நிறுத்திவிடுவோமா என கேட்டாராம். அதற்கு சூரி, தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தால் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தலாம் என கூறினாராம். 

இவ்வாறு பல ரத்தக்களரிகளுக்கு மத்தியில் அந்த ஸ்டண்ட் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...