படப்பிடிப்பு தளத்தில் பாலூட்டியபடியே நடிக்க தயாராகும் பரீனா!

3 years ago 311

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகன்-நாயகிக்கு பிறகு முக்கியமான நபரே வில்லி தான். அவர் இல்லை என்றால் இந்த சீரியல் இத்தனை நாள் இவ்வளவு ஹிட்டாக ஓடியிருக்காது.

அப்படிபட்ட ஒரு வெயிட்டான வில்லி வேடத்தில் நடித்தவர் தான் பரீனா என்கிற வெண்பா. இவர் இடையில் நிஜமாகவே கர்ப்பமாக இருந்தார், இதனால் குழந்தை பிறந்து அவர் நடிக்க வர மாட்டார்.



அவருக்கு பதில் வேறொரு வில்லி வருவார், அவர் யாராக இருக்க கூடும் என ரசிகர்கள் மத்தியில் பல பேச்சுகள் இருந்தன. ஆனால் பரீனாவோ இந்த வேடத்தை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார் போல தெரிகிறது.

குழந்தை பிறப்பதற்கு சில தினங்கள் முன்பு வரை நடித்துக் கொண்டிருந்தார், இப்போது குழந்தை பிறந்துவிட்டது. வீட்டில் குழந்தையை கவனித்துக்கொண்டு ஓய்வு எடுப்பார் என்று பார்த்தால் அதற்குள் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார்.

படப்பிடிப்பு தளத்தில் தனது மகனுக்கு பாலூட்டிய படியே மேக்கப் போட்டுக் கொண்டு தயாராகிறார். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அவரை பெருமையாக பேசி வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...