படப்பிடிப்பு தளத்தில் மயங்கிய பவர் ஸ்டார்... மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

3 years ago 305

தமிழ் ரசிகர்களுக்கிடையே பவர் ஸ்டார் என்ற பெயரோடு அறிமுகமானவர் தான் டாக்டர் சீனிவாசன். தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக சென்னை அண்ணாநகர் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். 

மருத்துவத்துறையில் இருந்தாலும் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருந்தமையின் காரணமாக தமிழ்சினிமாவில் நுழைந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு லத்திகா என்ற படத்தில் ஹூரோ அறிமுகமான சீனிவாசன்  “பவர் ஸ்டார்“ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதனையடுத்து தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் என்ற பட்டம் அவருடனே வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழ்சினிமாவில் 3 காமெடி ஹுரோக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருப்பார். 

இந்தப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது. ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கு 3 காமெடி ஹீரோக்கள் செய்யும் கலாட்டா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றது. 

ஆனால் பவர் ஸ்டாரின் நடிப்பைக் கலாய்க்காதவர்கள் இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும். ஆனாலும் அதனையெல்லாம் பெரிதும் கண்டுகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டியவர் தான் பவர் ஸ்டார். மேலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் கூட வனிதாவுடன் திருமணக்கோலத்தில் வந்த புகைப்படத்தைப்பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்த போதும்  தன்னுடைய பணிகளை மேற்கொண்டுவந்தார். 

இந்த சூழலில் தான் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, தீடிரென உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரை  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

மேலும் தற்போது மருத்துவர்கள் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்படிப்படப்பிடிப்பு தளத்தில் பவர்ஸ்டார் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை அறிந்த ரசிகர்களும் விரைவில் பவர் ஸ்டார் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துவருகின்றனர்.

ஏற்கனவே இதற்கு முன்னதாக  இந்தாண்டு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இரண்டு முறை இரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக  உடல் நலபாதிப்பு பவர் ஸ்டாருக்கு ஏற்பட்டுள்ளது.

அப்போதும் இதேபோன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதும் மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...