படவேலைகளை அவசர அவசரமாக நிறுத்த சொன்ன தளபதி... ஏன் தெரியுமா?

3 years ago 449

தளபதி விஜய் நடித்து வரும், 65 ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான செட் போடும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் விஜய் அதனை அவசர அவசரமாக நிறுத்த கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் தற்போது 'தளபதி 65 ' ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். 

மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. 

இதற்காக விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கையேடு அன்று இரவே விமானத்தில் ஜார்ஜியா பறந்தார். சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜிவாவில் நடந்த நிலையில், படக்குழுவினர் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திரும்பினர்.

குறிப்பாக படப்பிடிப்பு முடித்து விட்டு வந்த, ஒரு சில தினங்களில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இதை தொடர்ந்து தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ள படக்குழு, அதற்காக மால் போன்ற ஒரு, செட்டை ஸ்டுடியோவில் அமைத்து வருவதாக கூறப்பட்டது.

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், செட் அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுவது நல்லது அல்ல, என்று நடிகர் விஜய் அவசர அவசரமாக அனைத்து பணிகளையும் நிறுத்த கோரியுள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே கொரோனா பாதிப்பு சற்று தணிந்த பிறகே, மீண்டும் தளபதி 65 படத்தின் செட் அமைக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...