படுக்கையறை காட்சி சர்ச்சைக்கு பதிலளித்த லாஸ்லியா.. என்ன இப்படி சொல்லிட்டாங்க.!

3 years ago 695

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்ற லாஸ்லியா தனது இலங்கை தமிழ் மொழியாலும், குறும்புத்தனமான செயல்களாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

 

அந்த சீசனில் லாஸ்லியா, கவின், முகேன் தர்ஷன், சாண்டி உள்ளிட்ட அனைவரும் இணைந்து பிக்பாஸ் வீட்டில் பாடல்கள் பாடுவது, மற்றவரை போல் மிமிக்ரி செய்து பேசுவது, நடனமாடுவது என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளர்களாக மாறினார். இவர்கள் ஐந்து பேருக்கு மட்டும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். 

இறுதி வரை இவர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் லாஸ்லியாவுக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

அந்த வரிசையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் லாஸ்லியா இணைந்து நடித்திருக்கும் பிரண்ட்ஷிப் படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இதனையடுத்து மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் தர்ஷன் உடன் இணைந்து லாஸ்லியா நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதில் தர்சன் மற்றும் லாஸ்ஸியா இடையே மிகவும் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 

இதனை பார்த்த சிலர் பிக்பாஸ் இல்லத்தில் அண்ணன் தங்கையாக பழகி வந்த நிலையில், தர்ஷனுடன் இதுபோன்ற காட்சிகளில் எப்படி நடிக்க முடிந்தது என லாஸ்லியாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.


மேலும் லாஸ்லியா மற்றும் தர்ஷனின் படுக்கை அறை காட்சிகளை வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் நடிகை லாஸ்லியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

தங்கள் இருவர் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லாஸ்லியா, “தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி. படத்தில் வரும் ரொமான்டிக் காட்சிகள் வெறும் நடிப்பு மட்டுமே. யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள் நிஜவாழ்க்கையில் ஒப்பிடாதீர்கள். அந்தக் காட்சி எடுக்கப்பட்ட போது நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே செம ஜாலியாக தான் எடுத்து முடித்தோம். இது வெறும் நடிப்பு மட்டுமே” என கூறியுள்ளார்.

செய்திகள், வீடியோக்கள் பார்க்க அப்பப்போ சினிமா Youtube-ல் Subscribe பண்ணுங்க.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...