படுக்கையறை காட்சியில் நடிக்கும் போது என்ன உணர்வு? ஓப்பனாக சொன்ன அஞ்சலி..!

5 months ago 111

தெலுங்கு தேசத்தை சேர்ந்த அஞ்சலி தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். முதலில் அவர் நடித்த கற்றது தமிழ் என்கிற திரைப்படம்.

அடுத்து, அவர் நடித்த அங்காடி தெரு என்கிற திரைப்படம்.  இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. 

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்தார் அஞ்சலி. ஆனால் அதற்குப் பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் நிறைய பிரச்சனைகள் அஞ்சலிக்கு ஏற்பட்டது. நிறைய கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

அதன் மூலம் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மேலும் அஞ்சலியின் உடல் எடை அதிகரித்ததும் அவருக்கு வாய்ப்புகள் குறைவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கலகலப்பு மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே அஞ்சலியின் உடல் எடை அதிகரித்து இருந்தது.

உடல் எடையை குறைத்த  உடனே தெலுங்கு சினிமாவில் ஒரு ஐட்டம் பாடலில் என்ட்ரி கொடுத்தார் அஞ்சலி.

இதற்கு நடுவே டிவி சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி சமீபத்தில் இவர் நடித்து வரும் பஹிஷ்கரனா என்னும் சீரிஸில் அவருக்கு நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது ஆமாம் அது உண்மைதான் பஹிஷ்கரனா தொடரில் நெருக்கமான காட்சியில் நான் நடிக்க வேண்டி இருந்தது. 

அப்பொழுது அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டுதான் அந்த காட்சியை படமாக்கினார்கள். ஆனாலும் கூட அந்த காட்சியில் நடித்த பொழுது எனக்கு கூச்சமாகவும் டென்ஷனாகவும் இருந்தது என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...