படுக்கையை பகிரா விட்டால் வாய்ப்பில்லை.. பிரபல நடிகர் மீது ஷாலு ஷம்மு குற்றச்சாட்டு.!

3 years ago 459

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். திரைப்படத்தில் நாயகியாக நடித்து வந்தவர் ஸ்ரீதிவ்யா.

நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இதனால் கடுப்பான ஷாலு ஷம்மு சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக மாற்றிக்கொண்டார்.

தற்போது வரை இவர் அதனை மறவாது கடைப்பிடித்து வருகிறார். மேலும் இவர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்காக பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு நான் நோ சொன்னதால் எனக்கு அந்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பிரபல தமிழ் நடிகர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது மிகப்பெரிய நடிகரான அவருடன் படுக்கையை பகிரா விட்டால் அவருடைய படங்களில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

யார் அந்த நடிகர் என்பதையெல்லாம் ஷாலு ஷம்மு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவருடைய குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாலு ஷம்மு மிகப்பெரிய நடிகர் என யாரை குறிப்பிடுகிறார் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...