படுக்கையை பகிர்கிறேனா? ரங்கநாதனை கிழித்தெடுத்த சுசித்ரா

2 years ago 693

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பாடகி சுசித்ராவை தவறாக பேசிய நிலையில், போன் செய்து சரமாரியாக சுசித்ரா திட்டிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பயில்வான், சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பகிரங்கமாக மீடியாவில் பதிவிட்டு வருகின்றார்.

இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து பல பிரபலங்களை குறித்து அவதூறாக பேசிய பயில்வாலுனுக்கு பல எதிர்ப்புகள், பதிலடி வந்து கொண்டிருந்தாலும் தனது வேலையை தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் விவாகரத்து விடயத்தினை குறித்து பயில்வான் பேசிய போது பாடகி சுசித்ராவைக் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா தன்னை பற்றி தவறாக பேசிய பயில்வான் ரங்கசாமியை போன் செய்து வெளுத்து வாங்கி இருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பின்னணி பாடகியான சுசித்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதை தான் செய்யவில்லை என்றும் தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார். 

பின்பு குறித்த சர்ச்சைக்குப் பி்ன்பு சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...