தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குநரில் ஒருவர் பாக்யராஜ். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக மகனை அறிமுகப்படுத்தி வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
பாக்யரான் தான் இயக்கிய பாரிஜாதம் படத்தில் தனது மகளை நடிகையாக அறிமுகம் செய்தார். அப்படத்தில் கதாநாயகனாக பிரித்திவிராஜ் நடித்திருந்தார். இருவருக்கும் காதல் என்ற கிசுகிசுவும் எழுந்தது.
பின்னர், நடிகை சரண்யா படவாய்ப்பில்லாமல் மூன்று படங்களிலே சினிமாவைவிட்டு விலகினார். சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர்.
ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இதையடுத்து காப்பாற்றப்பட்ட சரண்யா அனைத்தையும் வெறுத்து எதிலும் பங்கு கொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், எங்கும் தலைக்காட்டாமல் இருந்த சரண்யா தற்போது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அடையாளம் தெரியாமல் மாறிய இவரது புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி பகிர்ந்து வருகிறார்கள்.