பல இரவுகள் கஷ்டப்பட்டேன்.. ரசிகர்களிடம் உண்மையை கூறிய சமந்தா

3 years ago 310

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் க்ளாமருக்கு இடமில்லை என்று கூறியும் இருந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் இணைந்து வரும் சமந்தா லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் உங்களைப் பத்தி இணையத்தில் வரும் மீம்ஸ் அண்ட் டுரோல்ஸ் பாக்குறப்போ உங்க மனநிலை எப்படி இருக்கும்? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சமந்தா, முன்பெல்லாம் அதை பார்க்கும்போது எனக்கு தூக்கமே வராது என்றும் அதைப் பற்றி அதிகமாக யோசித்து கவலைபட்டதாகவும் தெரிவித்ததோடு, கொடுமையாக இருக்கும், தற்போதெல்லாம் மீம்ஸ்களை பார்க்கும் போது தனக்கு சிரிப்பு வருகிறது என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரின் பல விதமான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்திருக்கிறார் சமந்தா. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...