பல ரகசியங்களை போட்டுடைக்கப் போகிறேன்... மிரட்டும் விஜய் தந்தை

3 years ago 401

விஜய்யின் தந்தையும், இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் யூடியூப் சேனல் மூலம் பல உண்மைகளை போட்டு உடைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

தன் யூடியூப் சேனல் மூலம் தன் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை தெரிவிக்கப் போவதாக எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார். 

காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர். இந்நிலையில் யூடியூப் சேனல்களுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை புரிந்து கொண்டு தானும் ஒரு யூடியூப் சேனலை துவங்கியிருக்கிறார். 

அந்த சேனல் மூலம் தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறாராம். யூடியூப் சேனலை துவங்கியது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பதாவது, 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகம் இருண்டு போய் கிடக்கிறது. என்னை நான் எப்பொழுதுமே புத்துயிராக வைக்க படங்கள் மூலம் உங்களுடன் பேசி வந்தேன். 

இனி யூடியூப் சேனல் மூலம் பேசப் போகிறேன். நான் இதுவரை 70 படங்களை இயக்கியிருக்கிறேன். பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். 

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் தான் யூடியூப் சேனல் எனும் புது முயற்சியில் இறங்கியிருக்கிறேன். என் சேனல் மூலம் பல உண்மைகளை போட்டுடைக்கப் போகிறேன் என்றார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...