பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்?

3 years ago 294

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான பா.இரஞ்சித், இதையடுத்து மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

இதனிடையே, தான் அடுத்ததாக இயக்க உள்ள படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தியது எனவும், அப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’  என பெயரிட்டுள்ளதாகவும் பா.இரஞ்சித் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அப்படத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகை துஷாரா விஜயன், சமீபத்தில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...