பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

2 years ago 258

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்ய நெருங்கிப் பார்க்க அப்போது வெளியே போன இனியா வீட்டுக்கு வர இதை பார்த்த ராதிகா கோபியை தள்ளிவிட கீழே விழுகிறார்.

இனியா டாடி என்னாச்சு என கேட்க இல்ல போன் கீழே இருந்த மாதிரி இருந்துச்சு அதான் தேடிட்டு இருக்கேன் என்ன சொல்ல போன் எங்க இருக்கு மேல ஏறி உட்காருங்க என சொல்கிறார். 

அடுத்து ராதிகா எழுந்து உன்னை சென்று விட கோபியின் அப்பாவும் வீட்டுக்கு வர கோபி ராதிகாவை பார்த்து நெளிந்து கொண்டே இருக்கிறார். அப்பாவையும் பொண்ணையும் பார்த்து அதை வெளியில் தெரியாமல் சமாளிக்கிறார்.

அடுத்து பாக்கியா பேங்குக்கு போக அவருக்கு லோன் தர முடியாது என சொல்லி விடுகின்றனர். இந்த பக்கம் ஈஸ்வரி எழில் அமிர்தா விஷயம் பற்றி சொல்ல அதற்கு தாத்தா பாவம் பார்க்கலாம் தப்பில்ல ஆனால் எதுக்கெல்லாம் பார்க்கணும்னு இருக்குல என சொல்லிக் கொண்டிருக்க அப்போது எழில் வர உனக்கு ஊர்ல ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கோம் பேசி முடிச்சிடலாமா என சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார். பிறகு பாக்யா வந்து லோன் கிடைக்காது என்ற விஷயத்தை சொல்ல தாத்தா ஊர்ல இருக்க சொத்தை வித்திடலாம் என சொல்ல ஈஸ்வரி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

அதன் பிறகு அசோசியேஷன் மீட்டிங் கூட அங்கு கோபி பழைய தலைவருக்கு ஆதரவாக உட்கார்ந்து இருக்க அவர் பாக்கியா நிற்பதாக சொல்லிவிட்டு நிற்கவில்லை என நக்கலாக பேசிக் கொண்டிருக்க கோபி சிரித்து வெறுப்பேற்றுகிறார். யாரும் தேர்தலில் நிற்க ஒத்துக் கொள்ளாததால் தன்னுடைய மனைவியை வெற்றியாளராக அறிவித்து விடட்டுமா என அசோசியேசன் தலைவர் சொல்ல பாக்கியா யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...