விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில்ஒன்று பாண்யன் ஸ்டோர்ஸ்.
விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.
ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, காவியா குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், கூட்டுக்குடும்பத்தின் நன்மை, சகோதர பாசம், என இன்றைய வாழ்வியலுக்கு தேவையான அனைத்து முக்கியத்துவமான விஷயங்களும் அடங்கியுள்ள இந்த சீரியல் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் சமூக வலைதள பக்கத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இதனால் இவர்கள் செய்யும் சிறு செயல்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்களளை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர், அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இவர் வயதான பாட்டி போல் வேடமிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.