பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படைத்த புதிய சாதனை.. நடிகர் வெளியிட்ட அதிரடி பதிவு!

3 years ago 222

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்ப வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்தி மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி மூன்று வருடங்கள் முடிவடைந்து நான்காவது வருடத்தில் கால் எடுத்து வைப்பதாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தன்னை மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இந்த சீரியலுக்கு மக்கள் கொடுத்துவரும் வரவேற்பிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர் சீரியல் செய்துள்ள இந்த சாதனைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...