பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து முக்கிய நடிகை விலகல்! அவரிடத்தில் யார் தெரியுமா?

3 years ago 454

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியான கண்ணனின் மனைவியாக நடித்து வந்த ஐஸ்வர்யா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து குடும்ப பாங்காக எடுக்கப்படும் இந்த சீரியல் டிஆர்பியில் ஐந்து இடங்களில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.


இந்த சீரியலில் கடைக்குட்டியான கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்தார்.

கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி, வீட்டை விட்டு வெளியேறி தனியே வசித்து வருவது போல சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபிகா சீரியலை விட்டு திடீரென விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

அந்த கதாபாத்திரத்தில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.






NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...