பாண்டியராஜன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருக்கும் விஷால்... எந்த படம் தெரியுமா..?

3 years ago 262

ஆக்‌ஷன்கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் நடிகர் விஷால். செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் மெகா ஹிட் ஆனது. 

அடுத்தடுத்து வந்த அவரது படங்களும் வெற்றி பெற முழுநேர நடிகர் ஆனார். அவரே சில படங்களை சொந்தமாக தயாரித்து தயாரிப்பாளர் ஆகவும் உயர்ந்தார். 

ஆனால் இந்த சினிமா கேரியரில் யாருக்குமே தெரியாத ஒரு விசயம் இருக்கிறது. நடிகர் விஷால் குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.


விஷால் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாகத்தான் நடித்தார். 1989ல் பாண்டியராஜன் நடித்த ‘ஜாடிக்கேத்த மூடி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக விசால் நடித்துள்ளார். 

இந்தப் படத்தை நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டிதான் தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பாண்டியராஜனுடன் சேர்ந்து டேன்ஸ் ஆடுவது போல் நடித்திருந்தார். 

7 வயதில் தான் விசால் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இதை ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...