பாய்ஸ் படத்தில் நடித்த இந்த நடிகரின் இப்போதைய நிலை தெரியுமா..?

3 years ago 627

இளவயதினரின் மன ஓட்டத்தை மையமாக வைத்து ஷங்கர் இயக்கியத் திரைப்படம் தான் பாய்ஸ். இதில் சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், தமன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் நடித்து இருந்தனர்.

ஷங்கர் இயக்கத்திலேயே அதிக சர்ச்சையில் சிக்கியப் படம் பாய்ஸ் தான். இதில் இளைஞர்கள் குழுவில் ஒருவராக வந்த சித்தார்த், இன்று தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட மொழிகளில் பிஸியாக உள்ளார். 

நடிகர் பரத் காதல் படத்துக்குப் பின் டாப் ஹியருக்குச் சென்றார். தேவயானியின் தம்பியான நகுலும் கூட சில படங்கள் ஹிட் கொடுத்து இப்போது செலிபிரேட்டியாகவே உள்ளார். தமன் இசையமைப்பாளர் ஆகிவிட்டார். 


அதேபோல் ஜெனிலியாவும் திருமணத்திற்கு முன்பு வரை விஜய், ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களோடு நடித்தார். இதில் சேர்ந்து நடித்த மணிகண்டன் பற்றி இப்போதுதான் முதன் முதலாகத் தெரியவந்துள்ளது.

மணிகண்டனுக்கும் முதலில் பாய்ஸில் நடிக்க ஆர்வம் இல்லாமல் தான் இருந்துள்ளது. நண்பர்கள்தான் அவரை ஆடிஷனுக்கு அனுப்பியிருகிறார்கள். அதில் ஹிட் ஆன மணிகண்டனுக்குத்தான் முதலில் காதல் பட வாய்ப்பு வந்திருக்கிறது. 

ஆனால் அவர் அதை உரிய ரெஸ்பான்ஸ் செய்யாததால் தான் அந்த சான்ஸ் பரத்க்கு போனது. பரத்தை காதல் திரைப்படம் வேற லெவலில் ஹிட் ஆக்கியது.

இதுவரை 8 படங்களில் மட்டுமே துண்டு, துக்கடா வேசங்களில் நடித்திருக்கும் மணிகண்டன் இப்போது குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி விட்டதாக அவரே தெரிவித்துள்ளார். 

காதலில் மட்டும் நடித்திருந்தால் தமிழில் முக்கிய ஹீரோவாக வந்திருப்பார் மணிகண்டன். ஆனால் இப்போதோ பட வாய்ப்பே இன்றி தவியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...