பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்துவிட்டதா..? ஷாக்கான ரசிகர்கள்

3 years ago 251

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் TRPயின் உச்சத்தை தொட்ட சீரியல் பாரதி கண்ணம்மா.

திரையுலகில் பல முறை தனது தோல் நிறத்திற்காக நிராகரிக்கப்பட்ட நடிகை ரோஷினி, இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரை முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

நடிகை ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் ஆன பெண்களை போல், முன் நெற்றியில் குங்குமம் வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர்.

ஆனால் உண்மையில், அவருக்கு திருமணம் ஆகவில்லை. அது போட்டோஷூட் நிகழ்வுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.

அதற்காக தான் தனது முன் நெற்றியில் திருமணமான பெண் போல் குங்குமம் அணிந்துள்ளார் நடிகை ரோஷினி.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...