பாலாஜி அவளுக்கு அண்ணன் மாதிரி – குடும்பத்தினர் அளித்துள்ள விளக்கம்.

3 years ago 313

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். 

அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது.

அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல பாலாஜி முருகதாஸ், யாஷிகா ஆனந்துடன் இணைந்து விஜய் தொலைக்காட்சயில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி உள்ள ‘கனக்ஷன்ஸ் ‘ நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டுள்ள வீடியோ ஒன்று வைரலானது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒரு ‘பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பரா ? ஆனால், ஏன் நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடரவில்லை’ என்று கேள்வியை கேட்டிருந்தார். 

அதற்கு பதில் அளித்த யாஷிகா’நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம். ஆனால், அவரை நினைத்து தற்போது நான் சந்தோசப்படுகிறேன். 

ஏனென்றால், இவர் இந்த நாட்களுக்காக எத்தனை ஆண்டுகள் ஆசைப்பட்டார் என்பது தெரியும். என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் யாஷிகாவிடம் இது குறித்து பிரபல நாளிதழ் ஒன்று செல் போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளது. அதற்கு யாஷிகா, இதைப் பத்தி இப்போ நான் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பல.

யார் எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கட்டும். எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று போனை துண்டித்து விட்டாராம். இதுகுறித்து யாஷிகாவின் அம்மா கூறியுள்ளதாவது, இந்த மாதிரி செய்திகளைக் கேள்விப்படும்போது சிரிப்புதான் வருகிறது . 

யாஷிகா, பாலாஜியைக் காதலிக்கவில்ல. இரண்டு பேரும் நல்ல நண்பர்கள். சொல்லப்போனா பாலாஜி அவளுக்கு அண்ணன் மாதிரி தான். இதுமாதிரி தேவையில்லாத வதந்திகளை யார் பரப்பி விடுறாங்கன்னு தெரியவில்லை என்று கூறியுள்ளாராம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...