பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகும் விஷால்?

3 years ago 252

விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது.

நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்துக்கு அங்கும் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை அள்ளியது.

இந்நிலையில், இப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. அதில் நடிகர் விஷால் வில்லனாக நடிக்க உள்ளாராம். தமிழில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் விஷால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் நடிகர் விஷால் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...