பால் வேண்டான்னு சொன்ன தளபதி.. எதை ஊத்தி அபிஷேகம் செய்யுறாங்க பாருங்க!

4 years ago 338

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,  விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம், 

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகியை முன்னிட்டு தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெளியாகியுள்ளது. 

அதிகாலை 4 மணி முதலே தியேட்டர் வாசல்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். 

இந்த படத்தில் ஜே.டி. என்ற பெயரில் கல்லூரி பேராசிரியராக விஜய்யும், பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். 

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த ரசிகர்களுக்கு விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதனால் நேற்று இரவு முதலே தியேட்டர்களில் மேள, தாளத்துடன் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

தியேட்டர் வாசல்களில் விஜய்யின் கட் அவுட், பேனர்கள், தோரணம், மின் விளக்கு அலங்காரங்கள் என மாஸ் காட்டிய ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், வான வேடிக்கைகளை பற்ற வைத்தும் மாஸ்டர் ரிலீசை தீபாவளி போல் கொண்டாடினர். 

விஜய் பட வெளியிட்டின் போது  ரசிகர்கள் செய்யும் மற்றொரு கொண்டாட்டமான விஷயம் அவருடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது. குடம் குடமாக பாலை கீழே கொட்டுவது பெரும் விமர்சனங்களை உருவாக்கியது. 

எனவே தன்னுடைய சர்க்கார் பட வெளியீட்டின் போது யாரும் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்றும், அதை ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள் என்றும் விஜய் அறிவுறுத்தியிருந்தார். 

எனவே வித்தியாசமாக யோசித்த விஜய் ரசிகர்கள் மாஸ்டர் பட போஸ்டருக்கு பிரபல குளிர்பானத்தை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


#மாஸ்டர் படத்தின் விஜய் போஸ்டருக்கு Coca-Cola ஊற்றி அபிஷேகம் செய்த ரசிகர்கள்..#MasterFilm #Master @CocaCola @actorvijay pic.twitter.com/b6EfWvRo1b

— Aathiraa Anand (@AnandAathiraa) January 13, 2021
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...