பாவாடை தாவணியில் மின்னும் ஸ்ரீ தேவி விஜயகுமார்.! போட்டோஸ்.!

3 years ago 950

கோலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விஜயகுமார். இவர் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு 5 மகள்கள் இருக்கின்றனர். இவர்களது குடும்பம் திரைத்துறையை சேர்ந்த குடும்பம் என்பதால் இவர்களது வாரிசுகளும் திரைத்துறையில் தடம் பதித்தனர். 


அந்தவகையில் விஜயகுமார் மகன் அருண் விஜய் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றார். முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வனிதா விஜயகுமார் குறித்து அனைவருக்குமே தெரியும். இவர்களை விட அதிக திரைப்படங்களில் நடித்தது நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தான்.

சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமானார். தொடர்ந்து, தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி, காதல் வைரஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். பின்னர், ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். 


இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருவது வழக்கம். 

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம் அப்படியே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...