பாஸ்கருடன் திருட்டுத்தனமாக வெளியில் சென்ற பார்வதி.. காத்திருந்த அதிர்ச்சி.!!

3 years ago 313

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. பாஸ்கருடன் திருட்டுத்தனமாக எழுதிச் சென்றுள்ளார் பார்வதி.

ரெஸ்டாரன்ட் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது எதிரில் இருந்த சேரில் பார்வதியின் முன்னாள் காதலன் விக்கி அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் பார்வதி அதிர்ச்சி அடைந்தார். 

அதன் பின்னர் விக்கி அந்தச் சேரில் இருந்து எழுந்து வெளியே செல்லும்போது சாவியை கீழே போட்டு அதை எடுப்பது போல எடுத்து பாஸ்கரை சந்திக்கிறார். இருவரும் நண்பர்களாகி விட்டதால் ஹாய் சொல்லி பேசிக் கொள்கின்றனர். பார்வதியை விக்கியிடம் அறிமுகம் செய்கிறார் பாஸ்கர்.

அதன் பின்னர் விக்கி ஜூசை தெரியாமல் செய்வது போல பாஸ்கர் மீது கட்டி விடுகிறார். அதனை அவர் வாஷ் செய்து வர பாத்ரூம் உள்ளே செல்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் பார்வதியை நீ யாருன்னு நான் பாஸ்கருக்கு அறிமுகம் செய்யட்டா என மிரட்டுகிறார். பின்னர் பார்வதியின் ஜூஸ் எடுத்து குடித்து விட்டு மீதியை வைத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பின்னர் பாஸ்கரிடம் அவனைப் பார்த்தாலே பிடிக்கல என கூறுகிறார். நீ ஆல் ரெடி டென்ஷன்ல இருக்க. ‌‌ அதான் உனக்கு அப்படித் தோணுது அடுத்த முறை நீ நார்மலா இருக்கும் போது நாம மீட் பண்ணி பேசலாம் என கூறுகிறார். 

இன்னொருமுறை வெளியிலயா வாய்ப்பேயில்லை என பார்வதி கூறுகிறார். அதன்பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக கையை பிடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அர்ச்சனாவின் தங்கச்சி வந்து பார்த்துவிடுகிறார். 

பின்னர் அவர் அர்ச்சனாவுக்கு போன் செய்து பாஸ்கர் எனக்கு வேண்டும் என கூறுகிறார். பாஸ்கர் இல்லாமல் என்னால் வாழ முடியாது நான் இறந்து போவேன் என சொல்கிறார். ‌‌ இதனால் அர்ச்சனா என்ன செய்வது என யோசிக்கிறார்.

இந்தப் பக்கம் சரவணன் சந்தியாவும் வண்டியில் வந்து கொண்டிருந்த போது பாதியில் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு பார்க்கில் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது சந்தியா தன் அப்பாவுடன் பந்து பார்க்கில் அமர்ந்து படித்தது, ஒரு நாள் யாரோ ஒருவர் தனக்கு பின்னாடி ஸ்வீட் பாக்ஸை வைத்து விட்டுச் சென்றது இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார். 

பின்னர் சரவணன் ஒருநாள் இந்த பார்க்கில் நான் ஒரு பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமல் ஸ்வீட் பாக்ஸை வைத்து விட்டுச் சென்றதாகக் கூறுகிறார். அதன்பின்னர் சந்தியா அது நான்தான் என கூறி இந்த கதைகளை பேசுகின்றனர்.

 சரவணன் சந்தியாவிற்கு இடையே ரொமான்ஸ் காட்சிகள் நடக்கின்றன. சரவணன் உங்களுக்கு குழந்தை என்ன பிடிக்குமா என கேட்க சந்தியா ரொம்ப ரொம்ப பிடிக்கும். யாருக்குத்தான் குழந்தை என்றால் பிடிக்காது என கூறுகிறார். அதன்பின்னர் இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர்.

வீட்டுக்குச் சென்ற சந்தியா ரூமிற்குள் சரவணனின் புகைப்படத்தை வைத்து பார்த்து பேசிக் கொள்கிறார். பொண்டாட்டிய தேவதை மாதிரி பார்த்துக்கறீங்க.. இனி நான் உங்களுக்கு பிடிச்ச பொண்டாட்டியா நடந்துப்பேன் கூறுகிறார். ‌‌ இத்துடன் முடிகிறது ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...