பிக் பாஸ் சினேகனுக்கு பிரபல நடிகையுடன் திருமணம் – யார் அந்த நடிகை தெரியுமா

3 years ago 198

தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ள அவர், இதுவரை 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 

இவருடைய பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுதவிர சில படங்களில் நடித்துள்ள சினேகன், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார். ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ள நடிகை கன்னிகா, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். 

கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

வருகிற 29-ந் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற உள்ளது. அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...