பிக் பாஸ் சீசன் 5 குறித்து வெளியான தகவல்.. நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது தெரியுமா?

3 years ago 491
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியில் 4 சீசன் முடிவடைந்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட வீட்டைப் புதுப்பிக்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 

கொரானா இரண்டாவது அலை காரணமாக தள்ளிப்போன நிகழ்ச்சி கடந்த வருடம் போலவே அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5-ஐ கமல் தொகுத்து வழங்க மாட்டார் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கியுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் பிக் பாஸ் சீசன் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கமல்ஹாசன் வாங்கிவிட்டார். 

அதனை அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்திக் கொண்டார் என அவரது மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து விலகிய ஒருவர் கூறியிருந்தார். இதனால் பிக் பாஸ் சீசன் 5-ஐ தொகுத்து வழங்கப் போவது கமல்ஹாசன் தான் என தெரிய வந்துள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...