பிக்பாஸூக்கு பிறகு ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

3 years ago 320

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை தேடி கொடுத்தது என்று கூறலாம் . 

அதனையடுத்து பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பல ரசிகர்களின் அன்பையும்,அதே நேரத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.

இந்த நிலையில் பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரம்யா பாண்டியன் அடுத்ததாக  2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...