பிக்பாஸ் கேபிக்கு விஜய் டிவி கொடுத்த புதிய வாய்ப்பு

3 years ago 262

‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்த கேப்ரியலா ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 

இந்நிலையில் பிக்பாஸ் கேபியை முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக்கி மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறது விஜய் டிவி. 

ஏற்கெனவே கடந்த சீசன்களில் பங்கேற்ற மஹத், யாஷிகா, சாண்டி உள்ளிட்டோர் விஜய் டிவியின் ஒரு சில ஷோக்களில் நடுவராக அமர்த்தப்பட்டனர். 

முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை திரையுலகின் இளம் நடிகைகள் நடுவர்களாக இருப்பார்கள்.

போட்டியாளர்களான முரட்டு சிங்கிள்ஸ் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அவர்களின் மனதை கவரவேண்டும். 

இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இருந்து யாஷிகாவும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமியும் நடுவர்களாக கலந்து கொண்டனர். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...