பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றிக் கிண்ணத்தை வென்ற போட்டியாளர் இவர் தான்? கசிந்த தகவல்…!

4 years ago 285

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியின் வெற்றியாளர் யார் என நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூலமே தெரிய வரும். 

இந்நிலையில் இந்த சீஸனின் அதிக மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஆரி அர்ஜுனன் வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிறந்த மற்றும் நேர்மையான கருத்துக்களை சரியான இடத்தில முன்வைக்க கூடிய போட்டியாளராக விளங்கியவர் ஆரி அர்ஜுனன்.

அவரின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் ஆரி அர்ஜுனன் அவர்கள் பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச்சென்றுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதன் அதிகாரப்பூர்வ உண்மைத்தன்மை இறுதி போட்டி நிகழ்ச்சியின் மூலமே தெரிய வரும்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...