பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கும் கோலிசோடா 2 பட நடிகர் – யார் தெரியுமா??

3 years ago 321

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

இதில் யார் யார் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

ஜி பி முத்து, குக் வித் கோமாளி கனி, தர்ஷா குப்தா, ராதாரவி, லட்சுமி ராமகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் கிடைத்துள்ள தகவலின்படி 18 போட்டியாளர்களில் ஒருவராக விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான கோலிசோடா 2 படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த வினோத் கேசவன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...