பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய நிகழ்ச்சி.! ஆச்சர்யத்தில் விஜய் டிவி ரசிகர்கள்.!

3 years ago 218
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த நான்கு வருடங்களாக மிகவும் பாப்புலரான நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ். முதல் சீசனுக்கு பின் அடுத்து ஒளிபரப்பான இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்கள் தொடங்குவதற்கு முன் கமல் அவற்றைத் தொகுத்து வழங்குவாரா இல்லையா என கேள்வி எழுந்தது.

ஆனாலும், கமல்ஹாசன் இடைவிடாமல் நான்கு சீசனையும் தொகுத்து வழங்கினார். அடுத்து ஒளிபரப்பாக உள்ள ஐந்தாவது சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா என்கிற சந்தேகம் தேர்தல் முடிவுகளுக்கு முன் இருந்திருக்கலாம். 

தேர்தலில் கமல் தோல்வியைத் தழுவிய பிறகு அவர்தான் ஐந்தாவது சீசனைத் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். 

தற்போது ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்கிற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் பிக்பாஸ் தான் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைக்கும். 

ஆனால், தற்போது பிக்பாஸ் பெற்ற புள்ளிகளை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக புள்ளிகளை பெற்று சாதனை செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...