பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்தில் 6 பேருக்கு கொரோனா; 2 வாரங்களுக்கு படப்பிடிப்பு ரத்து

3 years ago 277

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி செட்டில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து படப்பிடிப்பு இரு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூந்தமல்லி EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். 

சென்னையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில் EVP பிலிம் சிட்டியில் ஊழியர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகர்-நடிகைகளுக்கு வாரம் ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகளில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு படப்பிடிப்பு இரு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...