பிக்பாஸ் பாவனி நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

3 years ago 625

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பாவனி 88வது நாளாக வெற்றிகரமாக விளையாடி வருகிறார் என்பதும் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நான்கு போட்டியாளர்களில் ஒருவராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் பிக்பாஸ் பாவனி நடித்த வெப்திரைப்படம் ஒன்று வரும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

 

தெலுங்கில் உருவாகியுள்ள இந்த வெப் திரைப்படத்திற்கு ’சேனாபதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நரேஷ், அகஸ்தியா, ஹர்ஷவர்தன், பாவனி ரெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தை பவன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் டிசம்பர் 31-ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...