பிக்பாஸ் பிரபலம் மாரடைப்பால் மரணம்..! ரசிகர்கள் சோகம் ..!

3 years ago 787

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் கவனத்தை ஈர்த்த, பிரபல பாடகர் திடீர் என மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடகரும்,  பிக் பாஸ் மலையாளம் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சோம்தாஸ் சத்தன்னூர், கொல்லம் பரிப்பள்ளி மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த சோம்தாஸுக்கு, சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். 


இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

42 வயதாகும் சோம்தாஸ், ஏசியானெட்டின் மியூசிக் ரியாலிட்டி ஷோவான,  ஐடியா ஸ்டார் சிங்கரில் கலந்து கொண்டு தன்னுடைய இனிமையான குரலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். 

பின்னர் பல மலையாள படங்களில் பின்னணி பாடகராகவும், டப்பிங் கலைஞகராகவும் இருந்துள்ளார்.  

பிக் பாஸ் மலையாளம் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்த இவர், தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...