பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரியா பவானி சங்கர்

3 years ago 448

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். தன்னுடைய திறமையான நடிப்பால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். 

‘இந்தியன் 2’, அசோக் செல்வனுடன் படம், பத்து தல ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

ஏற்கனவே இவர் நடிப்பில் ’களத்தில் சந்திப்போம்’ ’குருதி ஆட்டம்’ ’ஓ மணப்பெண்ணே’, ’பொம்மை’  உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் பிக்பாஸ் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஓ மணப்பெண்ணே'. 

இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் சந்தர் இயக்கியுள்ள இப்படம் விரைவில் டிஸ்னிப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. 

இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. 17 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ள இந்நிகழ்ச்சி சுவாரஸ்யம் நிறைந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. 

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ளனர். போட்டியாளர்களாக அல்ல, தங்களது படத்தின் ப்ரோமோஷக்காக அங்கு செல்கின்றனர். 

ஹரிஷ் கல்யாண், கடந்த சீசனின் போட்டியாளர் என்பதால் அந்த அனுபவங்களை தற்போதைய போட்டியாளர்களிடம் நினைவுக்கூர்வார் என்று தெரிகிறது. 

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...