பிரகாஷ் ராஜின் முதல் மனைவி இவங்கதானா ? இத்தனை நாளா தெரியாம போச்சே!

3 years ago 746

நடிகை லலிதா குமாரி 1987 ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து வீடு மனைவி மக்கள், புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை, உலகம் பிறந்தது எனக்காக போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

இவர் இதுவரை 35 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். நடிகை லலிதாகுமாரி அவர்கள் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையும் ஆவார்.


பின் இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் பின் 2004 ஆம் ஆண்டு சித்து இறந்து விட்டார். அதன் பின் லலிதா குமாரிக்கும்,பிரகாஷ் ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2009 ஆம் ஆண்டு வி வாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின் நடிகை லலிதா குமாரி சினிமா விட்டு விலகி தன்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.  சமீபத்தில் இவருடைய புகைப்படம் வெளியாகியிருந்தது. இதை பார்த்து அனைவரும் நடிகை லலிதா குமாரியா இது என்று கேட்கும் அளவிற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...