பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்...! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...

3 years ago 349

தமிழ் திரையுலகில் கொரோனா நெருக்கடி காலத்தில் அடுத்தடுத்து திரையுலகினர் மரணிக்கும் செய்திகள் மக்களை பெருச்சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர், சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக திறமை கொண்டு விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.  

அந்த சோகத்தில் இருந்து திரையுலகம் மீள்வதற்கு முன்னதாகவே, கடந்த மாத இறுதியில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் காலமானார். 


கடந்த வாரம் பிரபல நகைச்சுவை நடிகரும், அதிமுக கொடியை வடிவமைத்தவருமான பாண்டு கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.  

இப்படி அடுத்தடுத்த மரணங்களால் சோகத்தில் மூழ்கிய திரையுலகினரை மற்றொரு காமெடி நடிகரின் மரணம் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. 

நெல்லை தமிழ் பேசி ரசிகர்களின் மனதை கவர்ந்த காமெடி நடிகர் நெல்லை சிவா நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 

வடிவேலு உடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி எல்லாம் பெரிய ஹிட். வைகைப் புயல் வடிவேலுவுடன் நெல்லை சிவா சேர்ந்து நடித்த "கிணத்தை காணோம்" மிகவும் பிரபலமானது. 

அவர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் நெல்லை சிவா நேற்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...