பிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… ரசிகர்கள் வாழ்த்து!

3 years ago 480

பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவி.

இவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஸ்ரீதேவி அசோக். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை திரைப்படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார்.


அந்த திரைப்படங்களை அடுத்து பட வாய்ப்புகள் இல்லாததால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்து வந்தார். மேலும், கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என அனைத்து முன்னணி வில்லி, குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பதார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் வில்லியாக அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

2019ம் ஆண்டு போட்டோக்ராபர் அசோக் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பமாக இருக்கும் போது கணவருடன் சேர்ந்து போட்டோஷூட் நடத்திய புகைப்படம் இணையத்தில் வெளியானது. மேலும்,ஸ்ரீதேவியின் வளைகாப்பு புகைப்படங்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...