தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக திகழ்ந்து குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும், தேசிய விருதினையும் பெற்று புகழ்பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், மகேஷ்பாபுவுடன் நடிக்கும் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ், பிகினி உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கவிருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ், அப்படியான பிகினி, லிப் லாக் போன்ற காட்சிகளில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை ஆணித்தரமாக கடைபிடித்து வருகிறேன்.
ஆகையால் இதுபோன்ற செய்தியை யாரும் நம்ப வேண்டாம்’ என்று வதந்தியின் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.