பிரபல நடிகரை புகழும் ஆத்மிகா... ஏன் தெரியுமா?

3 years ago 285

மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். 

தற்போது இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து ஆத்மிகா கூறும்போது, ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நான் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதை. விஜய் ஆண்டனி திறமையாக நடித்திருக்கிறார்.

அவர் ரியல் ஹீரோ. கொரோனா காலக்கட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடனே முதல் ஆளாக படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று கூறினார். 

தன்னை நம்பி படக்குழுவினர் காத்திருப்பதை அறிந்து விஜய் ஆண்டனி எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது’ என்றார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...