பிரபல விஜய் பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி! தீவிர சிகிச்சை..!

3 years ago 289

'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின் சார்பில் தற்போது படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளர் முரளி, மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடைசியாக இவர் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இதைத்தொடர்ந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு பின், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படத்தை தயாரித்து வருகின்றனர்.

மேலும் தேனாண்டாள் முரளி,  தமிழ்  திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார். 

இந்நிலையில் தற்போது இவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விரைவில் அவர் பூரண நலம் பெற வேண்டும் என திரையுலகத்தினர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...