பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறாரா ஜோதிகா? உண்மை தகவல் இதோ!

3 years ago 422

தமிழ் திரையுலகில் கொழு கொழு பொம்மை போல் வலம் வந்து ரசிகர்களை வசீகரித்தவர் ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, என தொடர்ந்து பல முன்னணி நைடகர்களுடன் நடித்தவர். 

பின்னர் தன்னுடன், 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'பேரழகன்', 'காக்கா காக்க' , 'சில்லுனு ஒரு காதல்', 'மாயாவி' போன்ற படங்களில் ஜோடியாக நடித்த சூர்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டே ஒட்டு மொத்தமாக விலகிய ஜோதிகா, இரண்டு குழந்திகளை பெற்று கொண்டு அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். தற்போது அவர்கள் இருவருமே நன்கு வளர்ந்து விட்டதால், மீண்டும் திரையுலகின் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 

அந்த வகையில் இவர் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த '36 வயதினிலே' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, நாச்சியார், தம்பி, ராட்சசி, பொன்மகள் வந்தால்,  போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ’சலார்’ என்ற திரைப்படத்தில் பிரபாஸ் சகோதரியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

ஜோதிகா இந்த படத்தில் பிரபாஸ் சகோதரியாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வந்தாலும் படக்குழுவினர் தரப்பில் இருந்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.

அந்த வகையில் கோடம்பத்தில் கசிந்த தகவலின் படி, ஜோதிகா பிரபாஸுக்கு ஜோடியாக எந்த படத்திலும் நடிக்க வில்லை என கூறுகிறார்கள். ஏற்கனவே ஜோதிகா சந்திரமுகி 2 படத்தில் நடிக்கிறார் என்கிற வதந்தி கிளம்பியது போல், இதுவும் முழுக்க முழுக்க வதந்தி என்றே கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...