பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து

3 years ago 197

நடிகர் பிரபாஸின் சமீபகால திரைப்படங்கள் கோடிகளில் வசூலை ஈட்டி வருவதால் தற்பொழுது இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆம் ராவ் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சாய் அலிகான் இணைந்து நடித்துவரும் திரைப்படம் ஆதிபுருஷ்.

இப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட முறையில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது படத்தின் பட்ஜெட் மிகப்பெரியது. இந்நிலையில் ஆதிபுருஷ் படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு வந்து விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் பெரிய அளவில் பொருள் சேதம் எதுவும் சேதம் அடையவில்லை. மேலும் யாருக்கும் விபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கையக வெளியே கொண்டுவரப்பட்டனர்.

அங்கு நடந்த காட்சிகள் இணைய தள பக்கத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...