பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை

3 years ago 284

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. 

இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுதவிர கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார்.

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலார் படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கும்போது பிரபாசுடன் ஸ்ரீநிதி நடனமாடும் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.





NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...