பிரம்மாண்ட படத்தின் ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி

3 years ago 370

மலையாளத் திரையுலகை சேர்ந்தவர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன் பின்னர் தொடர்ந்து பல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்தார். அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் மலர்ந்தது. இதனை அடுத்து அஜித்தை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.


தற்போது அனோஷ்கா மற்றும் ஆத்விக் என 2 குழந்தைகள் உள்ளனர். படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஷாலினி தற்போது பிரமாண்ட படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அஜித் மற்றும் ஷாலினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தகவல் உண்மையாக வேண்டும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...