விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களுக்கு பிடித்த வகையிலே இருக்கும். நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள்.
இதனால் பெரும்பாலானோருக்கு விஜய் டிவியில் வேலை செய்ய வேண்டும் என விருப்பம் உள்ளது. விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக இருந்து பிரபலமான முக்கிய நபர்களில் ஒருவர் பிரியங்கா.
பிரியங்கா விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும், அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பெரிய கூட்டமே உள்ளது.
அவரது காமெடியான பேச்சு மற்றும் திறமையின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.
தற்போது பிக் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா பங்கேற்றுள்ளார். தற்போது 10 வாரங்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்தநிலையில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிம் எட்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு மாதங்கள் இருப்பதால் பிரியங்கா இந்நிகழ்சியை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை. அதனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மா.கா.பா-வுடன் இணைந்து சிவாங்கி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமான நிலையில் இந்த நிகழ்ச்சியை விட இவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவரை பிரபலமாக்கியது.
தனது வெகுளித்தனமான பேச்சு, குறும்புத்தனமான செயல்கள் மூலம் சிவாங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் மூலம் சிவாங்கிக்கு பட வாய்ப்புகளும் வந்துள்ளது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார்.
குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்து வரும் சிவாங்கி, அஸ்வினின் ஆல்பம் பாடல்களிலும் பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது முழுநேர தொகுப்பாளினியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் இருக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது சிவாங்கி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை மா. கா. பா - வுடன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.