பீட்டர் பாலை பிரிந்த வனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்...

3 years ago 481

பீட்டர் பால் குறித்த நீண்ட பிரச்சனைக்குப் பிறகு வனிதா வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

லாக்டவுன் நேரத்தில் யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். அப்போது அவருக்கு உதவிய பீட்டர் பால் என்பவரை காதலித்து 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். 

பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு வாழ்க்கையை ஆரம்பித்த வனிதா அதேவேகத்தில் முடித்துக் கொண்டார். 

வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். அங்கு பீட்டர் பால் மூக்கு முட்ட குடித்ததால் பிரச்சனை செய்தார். அதன் பின்னர் சென்னை திரும்பிய பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

 

தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதாவிற்கு சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்க சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது. 



பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கி ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து அடுத்த படமொன்றி இயக்க உள்ளார். அதில் கதாநாயகியாக நடிக்க வனிதா ஒப்பந்தமாகியுள்ளாராம். 

அனல் காற்று என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிப்பதற்காகவே வனிதா தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பீட்டர் பால் குறித்த நீண்ட பிரச்சனைக்குப் பிறகு வனிதா வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...