பீஸ்ட் படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல இது தான் காரணமா... வெளியான முக்கிய தகவல்

3 years ago 303

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. ஜார்ஜியா, சென்னை, டெல்லி போன்ற பகுதிகளில் ஷுட்டிங்கை முடித்து விட்டு, அடுத்த கட்ட ஷுட்டிங்கிற்காக தயாராகி வருகிறார்கள்.

சென்னையில் பிரம்மாண்ட மால் போன்ற செட் அமைக்கப்பட்டு, முக்கிய சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஃபிலிம் சிட்டியில் சென்டிமென்ட் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் ஷைன் டாம் சாகோ மற்றும் செல்வராகவன் ஆகியோர் வில்லன் ரோலிலும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். நண்பன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளை எடுக்க பீஸ்ட் படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக முதலில் கூறப்பட்டு வந்தது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி, க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுக்க மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளதாம் படக்குழு. இங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

முதல்கட்ட ஷுட்டிங்கை ஜார்ஜியாவில் நடந்து கொண்டிருக்கையில் அங்கு கொரோனா அதிகரித்ததால் தான் பாதியிலேயே ஷுட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழு திரும்பி வந்து விட்டதாம். அப்போது எடுக்க திட்டமிட்டு, விட்டுப் போன காட்சிகளை எடுக்கவே மீண்டும் ஜார்ஜியா செல்வதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே சமயம், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் ரஷ்யாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை தான் தற்போது ஜார்ஜியாவில் எடுக்க போவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மற்றொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் முந்தைய கட்ட ஷுட்டிங்களை விட மிக இளமையாக தோற்றத்திற்கு விஜய் மாற போகிறாராம். இந்த காட்சிகமை படமாக்க தான் படக்குழு ஜார்ஜியா செல்கிறதாம். இந்த படத்தில் விஜய் துப்பறியும் ஏஜென்ட் ரோலில் நடிக்கிறாராம்.

த்ரில்லர் பிளாக் காமெடி படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்புக்கள் முடிந்து விட்டதாம். இந்த தகவலை படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உறுதி செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், பீஸ்ட் படத்தில் முக்கிய காட்சிகளை எடுக்க அட்வான்ஸ்ட் ரக லேட்டஸ்ட் கேமிராக்களை வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கேமிராவின் சில ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ள மனோஜ் பரமஹன்சா, சில சேசிங் சீன்கள், ரேஸ் சீன்களை எடுப்பதற்காக ஹெல்மெட்டில் பொருந்தும் வகையிலான கேமிரா, சைக்கிளின் முன்பகுதியில் பொருந்தும் கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

2022 ம் ஆண்டின் கோடை விடுமுறையில் பீஸ்ட் படத்தை தியேட்டரில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறதாம். பீஸ்ட் படத்தை முடித்த பிறகு விஜய் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவக்க போகிறாராம். டைரக்டர் வம்சி இயக்கும் தெலுங்கு - தமிழில் உருவாகும் தளபதி 66 படம் 2022 ஜனவரி மாதத்திற்கு பின் துவங்கப்படலாம் என கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...