பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் வேகமாக ஆட பூஜா ஹெக்டே என்ன செய்கிறார் பாருங்கள்.!

3 years ago 280

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடந்து விஜய் இளம் இயக்குனரான திலீப்குமார் உடன் இணைந்து பிஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக வெளிநாட்டில் முடித்த கையோடு. சென்னை வந்த படகுழு தற்காலிகமாக படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்தது. 

இது விஜய் ரசிகர்கள் வருத்தப்பட செய்திருந்தாலும்  தனது ரசிகர்கள் துவண்டு விழுந்து விடக்கூடாது என்பதற்காக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது.


இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு நல்ல செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது.

இவருக்கு ஏற்றார்போல் இந்த படத்தில் நடிப்பவர்கள் தற்போது ரெடியாகி வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படத்திற்காக நடன பயிற்சி கற்று வருவதாக தெரிவித்தார்.

பூஜா ஹெக்டே வெளியிட்ட இந்த புகைப்படத்தை தற்போது தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு இணையதளப்பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...